ரயில் நிலைய குண்டு வைப்பு: 3 பேருக்கு 18 ஆண்டு சிறை
சென்னை:
அமெக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் இந்திய வருகையை எதிர்த்து கடலூர் துறைமுக சந்திப்பு ரயில்நிலையத்தில் குண்டு வைத்த 3 தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதிகளுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2000மாவது ஆண்டு கிளிண்டன் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதை எதிர்த்து தமிழ்நாடு விடுதலைப்படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடலூர் ரயில் நிலையத்தில் குண்டு வைத்தனர். இது தொடர்பாக 9 பேர்கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புஅளிக்கப்பட்டது. இதில் நடராஜன், கோவிந்தராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 6 பிரிவுகளின் கீழ் தலா 18 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அனைவரும் தங்களது தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார். இதனால் 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் அதிகபட்சம் 5 ஆண்டு காலம்சிறையில் இருப்பார்கள்.
அதிலும் ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால், இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே அவர்கள்சிறைவாசம் அனுபவிக்கவுள்ளார்கள்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications