சென்னை கமிஷ்னர் விஜய்குமார் அதிரடி இடமாற்றம்: பண்ணையார், இந்து விவகாரத்தால் பதவி போனது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vijayakumarசென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீரப்பனைப் பிடிக்கஅமைக்கப்பட்டுள்ள அதிரடிப் படையின் கூடுதல் டிஜிபியாக விஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அதிரடிப் படையின் தலைவராக இருந்து வந்த கூடுதல் டிஜிபி ஆர். நட்ராஜ், சென்னை மாநகரகாவல்துறையின் புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடார் சமூக பிரமுகரான வெங்கடேச பண்ணையார் எண்கெளன்டர் விவகாரத்தில் தனது இனத்தினரானமலையாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கும், இந்து விவகாரத்தில் வரம்பை மீறிபோலீசாரை செயல்பட விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானவர் விஜய்குமார் ஐ.பி.எஸ்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் சிறப்புப் பாதுகாப்புப் படையிலும், பின்னர் கடந்த அதிமுக ஆட்சியின்போதுமுதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு கமாண்டோ பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜய்குமார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர்ஜெனரலாக வட கிழக்கு மாநிலங்களில் பணியாற்றினார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானவுடன் இவரை மத்திய அரசுப் பணியில் இருந்து மீண்டும் தமிழகத்துக்குஅழைத்து வந்தார். தேவாரம் தலைமையில் அமைக்கப்பட்ட அதிரடிப் படையின் துணைத் தலைவராகவிஜய்குமாரை ஜெயலலிதா நியமித்தார்.

ஆனால், தேவாரம்- விஜய்குமார் மோதல் ஏற்பட்டதால் விஜய்குமாரை சென்னை மாநகர கமிஷ்னர் என்றஅதிகாரம் மிக்க பதவியில் ஜெயலலிதா அமர்த்தினார். (பின்னர் தேவராமும் அதிரடிப் படைத் தலைவர் பதவியில்இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவருக்குப் பதிலாக நட்ராஜ் நியமிக்கப்பட்டார்.)

சென்னை கமிஷ்னராக முதலில் நல்ல பெயரெடுத்த விஜய்குமாருக்கு, சமீக காலமாக அடுத்தடுத்து சோதனைகள்வந்தன. ரெளடி வீரமணியை இவர் எண்கென்டரில் போட்டுத் தள்ள உத்தரவிட்டதை அனைவரும் வரவேற்றனர்.

ஆனால்,மலையாளிகள் நடத்தி வரும் ஒரு நிதி நிறுவனத்தில் போய் தனது நண்பருக்காக தகராறு செய்த நாடார்சமூகத்தின் முக்கியப் பிரமுகரான வெங்கடேச பண்ணையாரை போலீசார் எண்கெளன்டரில் காலி செய்தனர்.

இதையடுத்து விஜய்குமாரை மாற்றியே ஆக வேண்டும் என நாடார் சமூகத்தினர் ஒற்றைக் காலில் நின்றுவருகின்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த மலையாளிகளுக்காக பண்ணையாரை இவர் போட்டுத் தள்ளியதாகநாடார்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் விஜய்குமாரை விட்டுக் கொடுக்க முதல்வர் ஆரம்பத்தில் மறுத்தார். ஆனால், இந்து விவகாரம்வெடித்தபோது போலீசாரின் செயல்பாடு மிகவும் கணடனத்துக்குள்ளானது.

இந்து நிருபரின் மனைவி, மகள் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில், வாரண்ட் கூட இல்லாமல், படுக்கை அறைவரை போலீஸ் நுழைந்தது, இந்து ஆசிரியர் ராமின் வீட்டுக் காவலாளியை எண்கெளனடர் செய்வோம் எனமிரட்டியது, உச்ச கட்டமாக பெங்களூரில் காரில் போய்க் கொண்டிருந்த இந்து குடும்பத்தினரை மப்டியில் சென்றபோலீசார் வழிமறித்து சோதனையிட்டது ஆகியவை விஜய்குமாரின் நேரடி உத்தரவின் கீழ் தான் நடந்தாகக்குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து விஜய்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என ராம் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.இதனால் சமீப காலமாக செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்தார் விஜயக்குமார். வழக்கமாகவியாழக்கிழமைகளில் நடைபெறும் பத்திக்கையாளர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந் நிலையில் விஜய்குமாரின் செயல்பாடுகள் குறித்து மத்திய உளவுப் பிரிவும் பிரதமர் அலுவலகத்துக்குகாட்டமான ரிப்போர்ட் அனுப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து மாநில அரசை மத்திய அரசு கேள்விகளால்குடைந்தெடுக்க ஆரம்பித்துள்ளது.

தனது ஊழல் வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்டது, டான்சி வழக்கின் தீர்ப்பு எந்த நேரமும் வரப்போவது ஆகிய இக்கட்டான நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேணடிய சூழலுக்கு ஜெயலலிதாதள்ளப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தென் மாவட்டங்களில் சுமார் 24 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 5 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் நாடார் சமூகத்தினரின் வெறுப்பை தாங்கும் நிலையில் அதிமுக இல்லை என்பதைஉணர்ந்து கொண்டதால் தான் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக விஜய்குமாரை தூக்க முடிவு செய்துள்ளர்ஜெயலலிதா.

முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்க்ைகுய அதிகாரியான விஜயக்குமார் மாற்றப்பட்டுள்ளது, சென்னைகாவல்துறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த டிரான்ஸ்பரை விஜய்குமார் எதிர்பார்த்துதான் இருந்தார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 4 முறை சென்னை கமிஷ்னர்கள்மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கமிஷ்னராகியுள்ள நடராஜ், முன்பு சென்னை லஞ்ச-ஊழல் தடுப்புப் போலீசின் இணை இயக்குனராகஇருந்து பின்னர் அதிரடிப் படைக்கு மாற்றலாகி சென்றார். இவர் வகித்த அதிரடிப் படையின் தலைவர் பதவியில்விஜய்குமார் இப்போது காலடி எடுத்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+