அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு டிஸ்மிஸ்!
சென்னை:
3 நீதிபதிகள் குழு கொடுத்துள்ள அறிக்கையின்படி, தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் மற்றும் அரசுஊழியர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள் மீதான விசாரணையின் இறுதியில் முதல் கட்ட அறிக்கையை 3 நீதிபதிகள்குழு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், தலைமைச் செயலகம் மற்றும் சென்னை நகர அரசுஅலுவலகங்களில் வேலை பார்த்து வந்த 587 ஊழியர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஊழியர் சங்க நிர்வாகிகள் சூரியமூர்த்தி, பாண்டுரங்கன், ஸ்ரீதரன், செளந்தரபாண்டியன் ஆகியோர்முக்கியமானவர்கள். இவர்கள் தவிர, தமிழ்நாடு அரசு ஊர்தி ஒட்டுநர்கள் சங்கத் தலைவர் நடராஜனும் டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ளார். இவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவருக்கு கார் டிரைவராக நீண்ட காலம்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், ஊதியக் குறைப்புக்குஉள்ளானவர்கள், எந்தவித தண்டனையும் இல்லாமல் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் குறித்த பட்டியல் நேற்றுமாலை தலைமைச் செயலகம் மற்றும் சென்னை நகரில் உள்ள பிற அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டது.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள், இந்த பட்டியலை ஆவலுடன் பார்வையிட்டனர்.தண்டனையில்லாமல் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் சென்றனர். ஆனால் மற்றஊழியர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை.
டிஸ்மிஸ் ஆன ஊழியர்களுக்கு பணிக் கொடை (கிராஜுவிட்டி), ஓய்வூதியம் போன்றவை கிடைக்காது. மேலும்ஈட்டிய விடுப்பை (இ.எல்.) பணமாக்கும் வசதியும் கிடைக்காது. பொது சேம நல நிதியின் கீழ் சேர்த்து வந்த பணம்,அதற்கான வட்டியும் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications