தர்மபுரி பிரிக்கப்படுகிறது: கிருஷ்ணகிரி புதிய மாவட்டம்!
சென்னை:
தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய தர்மபுரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரியைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது.
புதிய கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான முடிவு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. மாவட்டப் பிரிவினைக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக தனிஅதிகாரியை நியமிக்கும்படியும் ஜெயலலிதா உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
புதிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஆகியதாலுகாக்கள் இடம் பெற்றிருக்கும். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பெண்ணாகரம், தர்மபுரி, பாலக்கோடு,பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகாக்கள் இருக்கும்.
1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தர்மபுரி மாவட்டம். அன்று முதல் இன்று வரை எந்தவித பொருளாதாரவளர்ச்சியும் இல்லாமல், தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. மிகப் பெரியநிலப்பரப்பைக் கொண்டதாக இருப்பதால் நிர்வாகத்திற்கும் மிகவும் சிரமமானதாக இருந்ததால், இந்தமாவட்டத்தைப் பிரிக்க கடந்த 2001ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அறிவிப்புவெளியிட்டார்.
ஆனால், மாவட்டத்தைப் பிரிக்க, மத்திய நாடாளுமன்றத் தொகுதி வரையறைக் குழு தடை விதித்து விட்டது.இதனால் உடனடியாக மாவட்டப் பிரிவினை நடைபெற இயலவில்லை. தற்போது குழுவின் சிறப்பு அனுமதியுடன்புதிய மாவட்டம் உருவாகவுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications