ஜெயலலிதா பதவி விலக ராமதாஸ், ப.சிதம்பரம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்குப் பொறுப்பேற்றுபொன்னையன் அல்லது ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கி விட்டு ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்றுபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

அதே போல, உச்ச நீதிமன்றத்தால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பதவி விலகி விடுவதேதமிழகத்துக்கு நல்லது என காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்குவழக்குகள் மாற்றப்படுவது சகஜமான ஒன்று தான்.

ஆனால் மாநில முதல்வர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குமாற்றப்படுவது அசாதராணமான ஒன்று. இந்தியாவிலேயே முதல் தடவையாக இது நடந்துள்ளது. அடிக்கடிதமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவேன் என்று ஜெயலலிதா பேசுவது வழக்கம். வழக்கு விஷயத்தில்தமிழகம் முதலிடத்திற்கு வந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளதன் மூலம் தமிழகத்துக்கு மானக்கேட்டை உருவாக்கிவிட்டார் ஜெயலலிதா.ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் நீதிமன்றம் கண்டிப்பது இது முதன்முறையல்ல. தர்மபுரியில்அதிமுகவினரால் பஸ் எரிக்கப்பட்ட வழக்கை அரசு நடத்திய விதத்தையும் நீதிமன்றம் கண்டித்தது. வழக்கைமீண்டும் விசாரிக்கச் சொன்னது.

நீதிக்குத் தலை வணங்குவேன் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா ஒருமுறை பேசினார். இப்போது உச்சநீதிமன்றத்திடம் கொட்டுப் பட்ட அவர் என்ன செய்ய வேண்டும்?. இதற்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். தனக்குப் பதில் பொன்னையன் அல்லது பன்னீர் செல்வத்தை அவர் முதல்வராக்க வேண்டும் என்றார்.

ப.சிதம்பரம் கடும் கண்டனம்:

ஒரு மாநில அரசை, உச்ச நீதிமன்றம் இதை விட கடுமையாக விமர்சிக்க முடியாது என்று காங்கிரஸ் ஜனநாயகபேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது நீதியை வளைக்க முயற்சி நடந்தது என்று உச்ச நீதிமன்றம்குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு மாநில அரசை இதை விட கடுமையாக விமர்சனம் செய்ய முடியாது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான்இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர் உடனடியாக பதவி விலகுவதே சரியான செயலாக இருக்க முடியும்.அது தான் தமிழகத்துக்கு நல்லது.

சட்டத்தை வளைக்க முயற்சி நடந்ததை சட்ட அமைச்சர் எப்படி சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்?. நீதியையும்சட்டத்தையும் நிலை நாட்டுவேன் என்று பதவியேற்கையில் உறுதிமொழி தந்தவர் ஆயிற்றே?. இந்த வழக்கின்போக்கையும், சாட்சிகள் வளைக்கப்பட்டு, பல்டி அடித்ததையும் நீதிபதி அமைதியாக பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும். இத்தனைக்கும் பின்னால் இருந்ததுயார் என்றால், முதல் குற்றவாளி ஜெயலலிதா தான் என்றார் சிதம்பரம்.

ஊழல் வழக்கை தனக்கு சாதகமாகத் திருப்ப முயன்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளதை வரவேற்று நாட்டின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் இன்று தலையங்கங்கள்எழுதியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+