பிலிம் சிட்டிக்கு இடம் மாறுகிறது டிஜிபி அலுவலகம்!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையோரம் காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி)அலுவலகம் தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கு மாற்றப்படுகிறது. அங்கு ரூ. 30 கோடியில் புதிய அலுவலகம்கட்டப்படவுள்ளது.
காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும். அங்கு பல அறைகள்பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் டிஜிபி அலுவலகத்தின் பல்வேறு பிரிவு அலுவலகங்களும்வெவ்வேறு இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந் நிலையில் டிஜிபி அலுவலகத்தை தரமணி திரைப்பட நகருக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது உள்ள டிஜிபி அலுவலகம் மூடப்படும். அங்கு காவலர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இதற்குப் பதிலாக தரமணி திரைப்பட நகரில் உள்ள 24 ஏக்கர் நிலப்பரப்பில், 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதியடிஜிபி அலுவலக வளாகம் கட்டப்படும். ரூ. 30 கோடி செலவில் இந்த கட்டடம் கட்டப்படும்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் இந்த அலுவலக வளாகத்தைக் கட்டும். நிர்வாக வசதிக்காகவே இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையவிருப்பதால், அதற்கு அருகாமையில் இருக்கும் பொருட்டு டிஜிபி அலுவலகம் தரமணிக்குமாற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
முதலில், தற்போதைய டிஜிபி அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு நவீன டிஜிபி அலுவலகம் கட்டஜெயலலிதா அரசு தீர்மானித்திருந்தது.
ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான, பாரம்பரியம் மிக்க இந்தக் கட்டடத்தைஇடிக்கக் கூடாது என்று கூறி இந்திய தேசிய தொல்பொருள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு அறக்கட்டளைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு பெற்றது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications