சிறையில் 500 நாட்களைக் கடந்தார் வைகோ!
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோ சிறையில் இன்றுடன் 500வது நாளை பூர்த்தி செய்கிறார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் எதுவும் கோராமல், தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வரும் வைகோஇன்றுடன் 500வது நாளை பூர்த்தி செய்கிறார்.
வேலூர் சிறையில் இத்தனை காலம் இதுவரை எந்த அரசியல் தலைவரும் சிறைவாசம் அனுபவித்ததில்லை என்றுகூறப்படுகிறது. அந்த வகையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களை முந்தி விட்டார் வைகோ.நீண்ட நாட்களாக சிறையில் இருந்தாலும், இன்னும் தனது சுறுசுறுப்பு, முறுக்கு, தைரியம் குறையாமல் படுதெம்பாகவே வைகோ உள்ளதாக அவரைச் சந்தித்து வரும் கட்சிப் பிரமுகர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.தினசரி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வைகோவைச் சந்தித்து கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறார்கள். வைகோவும் சிறையிலிருந்தபடியே கட்சியைக் கட்டுக் கோப்பாக நடத்தி வருகிறார். இதுவே வேறு கட்சியாக இருந்திருந்தால் இன்னேரம் சிதறிப் போயிருக்கும். இது வைகோவின் தலைமைக்குக்கிடைத்த பெருமை என்று மதிமுகவினர் மார் தட்டிக் கொள்கிறார்கள்.திமுக தலைவர் கருணாநிதி முதல் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு வரை பல கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள்வைகோவைச் சந்தித்து பேசியுள்ளனர். தன்னைச் சந்திக்க வரும் அனைவரிடம் தனது மிடுக்கு குறையாமல்,எந்தவித சலுகைகளையும் கேட்காமல் வழக்கம் போலவே இருந்து வருகிறார் வைகோ.சிறைக்கு வெளியே நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் வைகோசம்பவங்களுக்கேற்ப சிறைக்குள்ளும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார். காவிரிப் பிரச்சினைக்காகஒரு முறையும், பத்திரிக்கையாளர்கள் கைது உத்தரவைக் கண்டித்து ஒரு முறையும், மதிமுக நிர்வாகிகளை பொடாசட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து ஒரு முறையும் என மொத்தம் 3 முறை அவர் சிறைக்குள் உண்ணாவிரதம்இருந்துள்ளார்.சிறைக்குள் அடைத்தாலும், இன்னும் தான் சிங்கம்தான், கர்ஜிப்பதைக் கைவிட மாட்டேன் என்று நிரூபித்துவருகிறார் வைகோ.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications