எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார் விசு
பெங்களூர்:
இயக்குநர் விசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகஅறிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பெண்களைக் கவரும் குடும்ப சப்ஜெக்ட் படங்களாக எடுத்துத் தள்ளி சக்கை போடு போட்டவர்இயக்குநர் விசு. இயக்குநர் பாலச்சந்தரின் சிஷ்யரான விசு சமீப காலமாக படங்களை இயக்குவதில்லை. மாறாக,சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரட்டை அரங்கம் மூலம் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்பிரபலமடைந்துள்ளார்.
இந் நிலையில் பெங்களூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக நான்அரட்டை அரங்கத்தை நடத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பல பிரச்சினைகளை இந்தநிகழ்ச்சி மூலம் தீர்த்து வைத்த திருப்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
படம் எடுக்க எனக்கு இப்போது நேரம் இல்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எனது திரைப்படமாகவே நினைத்துக்கொள்கிறேன். ஆனால் இவை அனைத்தும் உண்மைக் கதைகள். இவற்றிற்கு முடிந்தவரைத் தீர்வு காண்பதில் அதிகஅக்கறை காட்டுகிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன். அப்பழுக்கற்ற மக்கள்தொண்டனாக நீடிக்க விரும்புகிறேன். அதற்கு அரசியல் களம், பதவி பெரிதும் உதவும் என்பதால் எம்.பி தேர்தலில்போட்டியிடுகிறேன் என்றார் விசு.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications