இன்று டான்சி தீர்ப்பு: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூடுகிறார்கள்!
சென்னை:
பரபரப்பான டான்சி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று சென்னைக்கு விரைந்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள டான்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டங்கள் கடந்த அதிமுகஆட்சியில் விற்கப்பட்டன.
இதை ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ்ஆகிய நிறுவனங்கள் வாங்கின.
அரசுக்குச் சொந்தமான நிலத்தை முதல்வர் பதவி வகிப்பவர் வாங்கியது தவறு என்றும், நிலத்தை வழிகாட்டிமதிப்பீட்டிற்குக் குறைவாக வாங்கியதன் மூலம் அரசுக்கு 3 கோடிரூபாய் அளவில் இழப்பு ஏற்படுத்தியதாகவும்ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
திமுக ஆட்சியில் மூன்றாவது தனி நீதிமன்றம் அமைத்து இரு நிறுவனங்களின் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.விசாரணையின் முடிவில் நீதிபதி அன்பழகன் ஜெ. பப்ளிகேஷன் வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு தலா 3ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.
இதேபோல் சசி எண்டர்பிரைசஸ் வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உட்பட 5 பேருக்கு தலா 2 ஆண்டுசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உட்பட அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்தஉயர் நீதிமன்ற நீதிபதி தினகர், ஜெயலலிதா மற்றும் சசிகலாவை விடுதலை செய்து 4.12.2001 அன்று தீர்ப்புகூறினார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கின் முதல் புகார்தாரரும், திமுக பிரமுகருமான ஆலந்தூர் பாரதி, ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு, பி.வி.ரெட்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு காலவரையின்றிஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில்அறிவிக்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தீர்ப்பு என்பதால்,தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு பாதகமாக இருந்தால் ஜெயலலிதா பதவி விலக வேண்டியதிருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்குவரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அத்தோடு கடந்த முறை தர்மபுரி மாவட்டத்தில் 3 விவசாயக் கல்லூரி மாணவிகள் அதிமுகவினரால் தீவைத்துஎரிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என்பதால் முன்னெச்சக்கை நடவடிக்கையாக தமிழகம்முழுவதிலும் காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications