கணவருடன் இணைந்தார் துணைவேந்தரின் மருமகள்!
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகத்தின் முயற்சியால், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேல் சேதுபதியும், மருமகள் சங்கீதாவும் நேற்று ஒன்றாகஇணைந்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சேதுபதி ராமலிங்கம். இவரது மகன் ராஜவேல்ராமலிங்கம். இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ராஜவேல்அமெரிக்கா சென்று விட்டார்.
தனது மாமனார் வீட்டில் சங்கீதா வசித்து வந்தார். இந் நிலையில் மாமனார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டும்,வேறு மாதிரியும் பல்வேறு கொடுமைகள் செய்வதாகக் கூறி சேதுபதி ராமலிங்கம் குடும்பத்தினர் மீது போலீஸில்புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேதுபதி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதுபதி குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுசெய்தனர்.
இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி கற்பகவிநாயகம், சேதுபதி ராமலிங்கத்தைச் சரமாரியாக விமர்சித்தார்.கடுமையாகக் கண்டித்தார். அவரது மகன் ராஜவேல் ராமலிங்கம் சென்னைக்கு வர வேண்டும் என்றுஉத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ராஜவேல் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து சென்னை வந்தார். நேராக உயர்நீதிமன்றத்தில்ஆஜரானார். அப்போது சங்கீதாவும் அங்கு வந்திருந்தார். ராஜவேல் நீதிமன்றத்தில் ஆஜரானதற்காக அவரை நீதிபதிகற்பகவிநாயகம் பாராட்டினார்.
பின்னர் நீதிபதி கூறுகையில், நீங்கள் இங்கு வந்துள்ளதன் மூலம் உங்களது குடும்பத்தினரைக்காப்பாற்றியுள்ளார்கள். இல்லாவிட்டால் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
சங்கீதா உங்கள் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளார். உங்களது நினைவுகளுடன் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.எனவே எல்லாவற்றையும் மறந்து விடுங்கள், கடந்த காலத்தை நினைவுகளிலிருந்து துடைத்து எறிந்து விடுங்கள்.
நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும். அதுவும் காதலுடன் வாழ வேண்டும். சங்கீதாவுடன் கை குலுக்கிக் கொள்ளுங்கள்( நீதிபதி சொன்னதும் சங்கீதாவை நோக்கி கை கொடுத்தார் ராஜவேல். அவரும், அதை பாசத்துடன் பிடித்துக்கொண்டார்).
நல்லது, இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள் (அப்போதுராஜவேலின் வக்கீல் குறுக்கிட்டு ஹோட்டல் மெளர்யாவில் அறை போட்டுத் தருவதாக குறிப்பிட்டார்). இவர்கள்முதலில் நன்றாக பேசட்டும், விவாதிக்கட்டும், சண்டை போட்டுக் கொள்ளட்டும், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளட்டும், திறந்த மனதுடன் பேசிக் கொள்ளட்டும். ஆனால் எப்படியாவது ஒன்று சேர வேண்டும். அதுதான்எனது நோக்கம்.
உங்களை சிறைக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால் எனக்குள் இருந்த மனிதன் அதை விரும்பவில்லை. எனவேதான் இத்தனை முயற்சிகள். இருவரும் மீண்டும் வியாழக்கிழமை வாருங்கள். அப்போது முன்ஜாமீன் குறித்து முடிவுசெய்யலாம் என்று கூறிய நீதிபதி, வியாழக்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications