மது விற்பனை "சூப்பர்": உற்சாகத்தில் தமிழக அரசு
சென்னை:
தமிழக அரசு திறந்துள்ள மதுக் கடைகள் மூலம் கடந்த 5 நாட்களில் மட்டும் அரசுக்கு ரூ. 80 கோடி அளவுக்குவருவாய் கிடைத்துள்ளது.
தனியார் மதுபானக் கடைகளை மூடிய தமிழக அரசு தற்போது மாநிலம் முழுவதிலும் தனது டாஸ்மாக் நிறுவனம்மூலம் மதுக் கடைகளைத் திறந்துள்ளது. இந்தக் கடைகளுக்கு பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் எதிர்ப்புதெரிவித்து வருகிற போதிலும் கூட விற்பனை அமோகமாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ. 80 கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள்தெரிவிக்கின்றன. ரூ. 70 கோடி வரை தான் டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால் இந்த இலக்கையும் மீறி கூடுதலாக ரூ. 10 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளதால், அதிகாரிகள்மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு மதுபானக் கடைகளில் குளிர்சாதன பெட்டி வசதி இல்லாததால், பீர் போன்றவற்றின் வியாபாரம்இன்னும் சூடு பிடிக்கவில்லை. ஜில் பீர் மட்டுமே வேண்டும் என்று குடிமக்கள் கேட்பதால், அதைக் கொடுக்கஇயலாத நிலையில் அரசு மதுக் கடைகள் உள்ளன.
இதையடுத்து இன்னும் சில நாட்களில் அனைத்துக் கடைகளிலும் பிரிட்ஜ்களை வைக்க டாஸ்மாக் முடிவுசெய்துள்ளது.
அரசின் இந்த புதிய மது விற்பனை மூலமாக பட்ஜெட்டில் விழும் நிதிப் பற்றாக்குறை பெருமளவு குறைந்துவிடுபம்என்று நிதித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அரசின் மொத்த வருவாயும் கணிசமாக உயரும்வாய்ப்புள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வீடுகள், கோவில்கள், பள்ளிகள், மளிகைக் கடைகள், சந்தைகளுக்கு அருகே கடைகளை வைப்பதை பெண்கள்எதிர்த்து வருவதை கண்டுகொள்ளாமல், மது விற்பனை மூலம் அதிக வசூல் ஆவதை மட்டும் நினைத்து டாஸ்மாக்நிறுவனமும், அரசும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றன.
இநத்க் கடைகளை வேறிடத்துக்கு மாற்றுவோம் என அறிவித்திருந்தாலும் இதுவரை அது தொடர்பானநடவடிக்கைகள் சூடு பிடிக்கவில்லை.
சேலத்தில் மாணவிகள், பெண்கள் ஊர்வலம்
இதற்கிடையே சேலத்தில் பள்ளிக்கு அருகே அரசு மதுக்கடை வைத்திருப்பதை எதிர்த்து மாணவிகள் மற்றும்பெண்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
சேலம், சூரமங்கலம் பகுதியில் மகளிர் பள்ளிக்கு அருகே மதுக் கடை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளிமாணவிகளும், பெண்களும், பொது மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இந்தப் பள்ளியிலிருந்து மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்கிளம்பியது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அவர்கள கலெக்டரைச் சந்தித்து, மதுக் கடையைஉடனடியாக அப்புறப்படுத்துமாறு கோரினர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications