நாளை டிசம்பர் 6: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு- ரயில், பஸ்களில் தீவிர சோதனை
கோவை& செனனை:
நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதரீதியில் டென்சனான, கோயம்புத்தூரில் மிக பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் கண்காணிப்பும்,ரயில்களில் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 10,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்துள்ள சில இஸ்லாமிய அமைப்புகள்ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறியுளளன. ஆனால், அதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தடையைமீறுவோம் இந்த அமைப்புகள் கூறியுள்ளதால் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
இந் நிலையில் இந்த தினத்தை வெற்றி தினமாகக் கொண்டாடப் போவதாக விஸ்வ இந்து பரிஷத்அறிவித்துள்ளதால் அது பதற்றத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.
டென்சன் மிகுந்த கோவையில் சி.ஆர்.பி.எப். போலீசார் சுமார் 3,000 பேர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய கோவில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தேங்காயில் பாம்வைக்கப்படலாம் என்பதால் சில கோவில்களில் நாளை தேங்காய் உடைக்கவும், கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களும்,பயணிகளின் பெட்டிகளும் சோதனையிடப்படுகின்றன. ரயில்களிலும் சோதனைகள் தீவிரமாகியுள்ளன.
தண்டவாளங்கள், பாலங்களில் ரோந்துப் பணிகள் இடைவிடாமல் நடந்து வருகின்றன.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத் அகில இந்தியச் செயலாளர் மோகன்ஜோஷி,
டிசம்பர் 6ம் தேதியை மறக்க முடியுமா? என்று முஸ்லீம்கள் கேட்கிறார்கள். எங்களாலும் அதை மறக்க முடியாது.அன்னியர் படையெடுப்பால் 30,000 கோவில்கள் இடிக்கப்பட்டன. அந்த இடங்களில் 3,000 மசூதிகள்கட்டப்பட்டன. அதை எப்படி எங்களால் மறக்க முடியும்.
நாளைய தினத்தை வெற்றி தினமாக நாங்கள் கொண்டாடுகிறோம்.
அசாம், காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் முஸ்லீம்கள் அதிகரித்து வருகின்றனர். கோவா, கர்நாடகம், தமிழகம்,ஆந்திரா, கேரளாவில் கிருஸ்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இந்த முஸ்லீம்களும் கிருஸ்துவர்களும் ஒரு தனிநாடு கேட்பார்கள் என்பதை நாங்கள் மனதில் வைத்தே செயல்பட்டு வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications