விடுதலை புலிகளை எச்சரிக்க வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கோரிக்கை
சென்னை:
தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளை மத்திய அரசு எச்சரிக்கவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைகடற்படையினரும்,இலங்கை மீனவர்களும் அடிக்கடி, தமிழக மீனவர்களை கடத்திச் செல்வதைத் தடுக்கக் கோரிபலமுறை தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக கடந்த 16ம் தேதியும் கடிதம் எழுதியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில்ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தியதாகத் தகவல் வெளியானது.ஆனால் அந்த மீனவர்கள் திரும்ப வந்த பிறகு, அவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் எனதெரியவந்துள்ளது.
தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளது, தமிழக பாதுகாப்புக்கு மட்டுமல்லாது இந்தியாவின்பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இந்தியாவின் இறையாண்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசுஎச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்ஆக்கிரமித்துள்ளனர்.
மன்னார் வளைகுடாப் பகுதியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கூட்டு ரோந்து வர ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications