மதமாற்ற தடை சட்டம்: திமுக- பா.ஜ.க எம்.பிக்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதமாற்றத்திற்குத் தடை விதிக்க சட்டம் இயற்றக் கோரும் தனி நபர் தீர்மானத்தை மாநிலங்களவைையில் பா.ஜ.ககொண்டு வந்தபோது அதை திமுக கடுமையாக எதிர்த்தது.

தனிநபர் தீர்மானம் மீதான விஜாதத்தைத் துவக்க மாநிலங்களவைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லாஅனுமதியளித்ததையடுத்து, பா.ஜ.கவைச் சேர்ந்த கிரிபால் பர்மர், மதமாற்றத் தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும் என்று கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதற்கு திமுகவைச் சேர்ந்த விடுதலை விரும்பி கடும் ஆட்சபேம் தெரிவித்தார். அவர் பேசுகையில்,அரசியலமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உள்ளது. இதுபோன்ற தீர்மானம் கொண்டு வருவது, அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கு எதிரானது.

தமிழக சட்டப் பேரவையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் திமுக கடுமையாக எதிர்த்தோம். இங்கும்எதிர்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ள போதிலும், அரசியல் சட்டத்தின்அடிப்படையை மாற்றக் கோரும் தீர்மானம் என்பதால் இதை திமுக மிகக் கடுமையாக எதிர்க்கிறது என்றார்.

அவரது ஆவேசமான பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்புத் தெரிவித்தனர்.விடுதலை விரும்பியின் பேச்சுக்கு பதிலளித்த சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவைத் தலைவரின் ஒப்புதலுடன்தான்இந்தத் தீர்மானம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இது வெறும் தீர்மானம்தான். அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு கொண்டு வருவதாகஇருந்தால் அனைத்து அம்சங்களையும் பரிசீலிக்கும் என்றார்.

அவருக்கு ஆதரவாகவும் திமுக எம்.பியின் பேச்சுக்கு எதிராகவும் பா.ஜ.க. எம்.பிக்கள் குரல் எழுப்பினர்.

பின்னர் அதிமுக உறுப்பினர் ஜோதி பேசுகையில், இச் சட்டம் செல்லுபடியாகும் என 30 ஆண்டுகளுக்கு முன்பேஉச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. முதலில் காங்கிரஸ் அரசுதான் மத்தியப் பிரதேசத்தில் இச் சட்டத்தைக்கொண்டு வந்தது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+