ஜெ. தலைமையில் கடற்கரை நிர்வாக ஆணையம் அமைப்பு: நாட்டிலேயே முதல்முறை
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக, 19 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலக் கடற்கரை நிர்வாக ஆணையத்தைமுதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார். அதற்கு அவரே தலைவராகவும் செயல்பட உள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கடற்கரைகளை பாதுகாத்து, பராமரிப்பது இதன் முக்கியப் பணியாகும்.கடற்கரைகளை பாதுகாப்பதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருப்பது இந்தியாவிலேயே தமிழகத்தில்மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சென்னை பெருநகரப் பகுதிக்குள் வரும் கடற்கரைகளைப் பாதுகாக்க பொதுப் பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு குழுவும், பிற மாவட்ட கடற்கரைகளைப் பாதுகாக்க அந்தந்த மாவட்டஅமைச்சர்கள் தலைமையில் தனிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பன்னீர் தலைமையிலான சென்னை பெருநகர கடற்கரைக் குழு மெரீனா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைகள்,திருவான்மியூருக்கும், நீலாங்கரைக்கும் இடையிலான கடற்கரை ஆகியவற்றை பாதுகாத்து, பராமரிக்கும்.
இதேபோல காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடற்கரை குழுக்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள்பொறுப்பு வகிப்பர்.
இந்த மாவட்ட கடற்கரைகளை அழகுபடுத்துவது, சுத்தமாக வைத்திருப்பது, பாதுகாப்பது போன்ற பணிகளைஇவர்கள் மேற்பார்வை செய்து வருவர்.
கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தில் தனியாரையும் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை மற்றும் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடற்கரை குழுக்கள் மாதத்திற்கு ஒரு முறை கூடிவிவாதிக்கும். சென்னைப் பெருநகர கடற்கரை ஆணையக் கூட்டம் முதல்வர் தலைமையில் 3 மாதத்திற்கு ஒருமுறைநடைபெறும்.
சென்னை திரும்பிய ஜெ-சசி:
இதற்கிடையே ஹைதராபாத் ஓய்வை முடித்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் நேற்றிரவுசென்னை திரும்பினர்.
நவம்பர் 26ம் தேதி ஜெயலலிதா, சசிகலா ஹைதராபாத் சென்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர்சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனது திராட்சை தோட்ட பங்களாவில் தங்கியிருந்த ஜெயலலிதா, 17 நாள்ஓய்வுக்குப் பின் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
சசிகலா இடையில் ஒருமுறை சென்னை வந்தார். போயஸ் கார்டனில் வைத்து இந்தியாவின் ஒரு முன்னணி தொழில்நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு ஹைதராபாத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications