கர்நாடகம் வேண்டாம்: வழக்கை மாற்ற கோரும் ஜெ. மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
கர்நாடகத்திற்கு மாற்றப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை புதுவைக்கு மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல்செய்துள்ள மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக ஜெயலலிதா, தோழி சசிகலா,முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கு தற்போதைய ஜெயலலிதா ஆட்சியின் கீழ் முறையாக நடக்கவில்லை என்றும் வேறு மாநிலத்திற்குவழக்கை மாற்றக் கோரியும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந் நிலையில் கர்நாடகத்தில் தமிழக எதிர்ப்பு போக்கு நிலவுவதாகவும், கர்நாடக அரசு தன் மீதும் தமிழக மக்கள்மீதும் கசப்புணர்வுடன் இருப்பதால் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாதுஎன்றும், எனவே வழக்கை புதுவைக்கு மாற்றக் கோரியும் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி காரே, நீதிபதி வரியவா, நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்றுவிசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மறுதேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள்தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது நீதிபதிகள் வரியாவும்சேமாவும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications