திமுகவின் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்: ராமதாஸ்
சென்னை:
தனியார் தொலைக்காட்சிகளும், தமிழ் சினிமாக்களும் தமிழைக் கெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனஎன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதுகுறித்து திமுக எடுக்கப்போகும் முடிவிற்காக பாமக காத்திருக்கும். அதன்பிறகு எங்களது நிலைப்பாடை நாங்கள்தெரிவிப்போம்.
தற்போது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் விரசமான வசனங்கள் அதிகரித்து விட்டன. வசனங்களைகேட்கவே முடியவில்லை. எதிர்கால தலைமுறையினரை பாதிக்காத வகையில் தமிழ்த் திரைப்படங்களில் வசனங்கள்இடம் பெற வேண்டும்.
அதே போல தனியார் தொலைக்காட்சிகள் ஏற்கனவே தமிழ்க் கொலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன். இந்தஇரு ஊடகங்களும் தமிழ் மொழியை பாதிப்படைய வைத்து வருகின்றன. இந் நிலை மாற வேண்டும்.
இசை நிகழ்ச்சிகளில் தமிழுக்கு உரிய மரியாதையும், கெளரவமும் கொடுக்கப்படுவதில்லை. இதற்காக, கொங்குத்தமிழ் பன்னிசைப் பெருவிழா என்ற பெயரில் நாளை முதல் 2 நாட்களுக்கு தமிழிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளோம்.
இதை நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த பெருவிழாவின்போதுஇசை ஆய்வரங்கம், இசையரங்கம் நடைபெறும் என்றார் ராமதாஸ்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications