கச்சத்தீவு பிரச்சினை: இலங்கையுடன் சின்ஹா பேச்சு
ராமேஸ்வரம்:
கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை மீனவர்கள் இணக்கமாக மீன் பிடிப்பது தொடர்பாக இலங்கைஅரசுடன் பேச்சு நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச்செல்லப்படுவதும், அங்கு சிறை வைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீன் வலைகள்சேதப்படுத்தப்படுவதும் சமீப காலமாக தினசரி நடவடிக்கைகளாக மாறி விட்டன.
இதனால் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இலங்கைகடற்படையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்கள் பயமின்றியும்,நிம்மதியாகவும் மீன் பிடிக்கஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் தமிழக, புதுவை மீனவர் கூட்டமைப்பின் தலைவர் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமிருந்து கடிதம் வந்துள்ளது. அதில், கச்சத்தீவில் இலங்கைமீனவர்களுடன், தமிழக மீனவர்களும் இணக்கமாக மீன் பிடிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைநடந்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வேதனையில் மூழ்கியுள்ள எங்களுக்கு லேசான ஆறுதலைத் தந்துள்ளது. இருப்பினும் பேச்சோடு நின்றுவிடாமல் எங்களது வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் வகையிலான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கவேண்டும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications