உண்ணாவிரதம் இருக்க டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கோர்ட் அனுமதி
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உண்ணாவிரதம்மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஓடும் கருப்பாநதி ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு புதிய தமிழகம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதம்இருக்க அக் கட்சி முடிவு செய்தது. பல்வேறு கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிதென்காசி டி.எஸ்.பி.யிடம் மனு செய்தனர்.
ஆனால், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டியும், டாக்டர் கிருஷ்ணசாமி மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாலும்உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க முடியாது என்று டி.எஸ்.பி. கூறி விட்டார்.
இதை எதிர்த்து நெல்லை மேற்கு மாவட்ட புதிய தமிழகம் செயலாளர் சண்முகராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், சென்னை போலீஸ் சட்டத்தின் கீழ் உண்ணாவிரதம்இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமே இப்போது அர்த்தமற்ற ஒன்றாகி விட்டது.
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், மாநில பாதுகாப்பை போலீஸார் மேற்கொண்டதால் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் சட்டம் இயற்றப்பட்டு விட்டதால் இனி மேலும் சென்னைபோலீஸ் சட்டத்தைப் பிரயோகிப்பதில் அர்த்தமில்லை. அதைப் பயன்படுத்தவும் முடியாது.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது கிமினல் வழக்குகள் இருப்பது உண்மைதான். இருப்பினும்,அதைக் காரணம் காட்டி ஒட்டு மொத்தமாக ஒரு போராட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது. எனவே டிசம்பர் 20ம்தேதி முதல் 31ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினர் அனுமதி வழங்கவேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். காலை 9 மணி முதல்மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கலாம். தனிப்பட்ட யாருடைய பெயரையும், ஜாதியையும், மதத்தையும்குறிப்பிட்டு யாரும் பேசக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உண்டுஎன்றார் அவர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications