புதிய தலைமை செயலக வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை தடை செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான பூமிபூஜையும் நடந்து முடிந்துள்ளது. இந் நிலையில் முன்னாள் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர்சி.குப்புராஜ் தலைமையில் நான்கு பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

புதிய தலைமைச் செயலகத்தை கோட்டூர்புரத்தில் கட்டினால் பல்வேறு கல்வி நிலையங்கள் பாதிக்கப்படும்,சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அவர்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கில் நேற்றுடன்வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்தது.

இதையடுத்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அதே நேரத்தில் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் விட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவேஅனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+