திருவாரூர், நாகையில் 5,000 விவசாயிகள் கைது
திருவாரூர்:
மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி டெல்டாப் பகுதியின் கடை மடை மாவட்டங்களான நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.
காவிரியின் கடை மடைப் பகுதி மாவட்டங்களான நாகை மற்றும் திருவாரூரில் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. இதையடுத்து மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டும் என்று தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதிகளில் விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகின்றனர்.
சமீபத்தில் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி அணை திறந்து விடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நீர் போதாது, கூடுதல் நீர் திறந்து விடப்படவேண்டும் என்று கோரி நாகை,திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் மேற்கொண்டனர்.
நாகை, திருவாரூர், மன்னார்குடி, சீர்காழி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சாலை மறியல்கள் நடந்தன. இதையடுத்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம் ஆகியோர் உள்ளிட்ட 5,000 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகள் போராட்டத்தையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications