ஓட்டை பஸ்களை ஓட்டாதீர்: போக்குவரத்து அமைச்சர் உத்தரவு
சென்னை:
பழுதடைந்த, அபாயகரமான பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகநிர்வாக இயக்குநர்களை போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் மன்னார்குடியில், பேருந்தில் பயணம் செய்த 3 வயது சிறுமி, பேருந்தில் இருந்த துளை வழியாக கீழேவிழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, பழுதடைந்தபேருந்துகளை உடனடியாக சரி பார்க்குமாறு உத்தரவிட்டார். மேலும் 6 போக்குவரத்துக் கழக அதிகாரிகளையும்தற்காலிக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களின் கூட்டம் சென்னையில்நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் விஸ்வாதன் பேசுகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை மட்டுமே இயக்குங்கள். பழுதடைந்த பேருந்துகளை உடனடியாகபயன்பாட்டிலிருந்து நிறுத்தி விடுங்கள். முறையாக சரி செய்யப்பட்ட பின்னரே அந்த பேருந்துகளை மீண்டும்உபயோகப்படுத்த வேண்டும்.
புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக முதல்வர் தெரிவித்துள்ள உத்தரவுகளின்படி நடந்து கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர் விஸ்வநாதன்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications