எம்ஜிஆர். நினைவு தினம்: ஜெ. அஞ்சலி
சென்னை:
முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். அவரது 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம்முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர். நினைவிடத்தில்முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், ஜெயக்குமார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர்இதில் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் பொன்னையன் தலைமையில், தமிழகத்தை முதல் மாநிலமாக்கஎம்ஜிஆர் வழியில் தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஜெயலலிதா உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், எம்ஜிஆர் கழகப் பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன், மக்கள் தமிழ் தேசம்கட்சித் தலைவர் கண்ணப்பன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்திருந்தனர்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications