நீதிபதி திடீர் இடமாற்றம்: நெடுமாறன் விடுதலையாவதில் புதிய சிக்கல்!
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஜாமீனில் விடுதலை ஆவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்க இருந்த நீதிபதி திடீரென மாற்றப்பட்டுவிட்டார்.
விடுதலைப் புலிகளை ஆதத்துப் பேசியதாக கூறி நெடுமாறன் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. கடந்த 15 மாதமாக அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், பொடா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால்திண்டுக்கல் மற்றும் ஆலந்தூர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நெடுமாறன்விடுவிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இரு நீதிமன்றங்களிலும் ஜாமீன் கோரி நெடுமாறன் சார்பில் மனுக்கள் தாக்கலாயின.
இதில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்றுவிசாரணை முடிவடைந்தது. இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ஆனந்தன் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை நெடுமாறனின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆனால் நீதிபதி ஆனந்தன் வரவில்லை.
நீதிபதி ஆனந்தன், கூடுதல் மாஜிஸ்திரேட்டாக 48 நாள் பயிற்சியில் வந்தவர் என்றும் ஆனால் பயிற்சிக் காலம்முடிவடைவதற்குள் அவர் இன்று இடம் மாற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இந்த ஜாமீன் தொடர்பாக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தையே மீண்டும் அணுகுமாறும் நெடுமாறன்தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் நெடுமாறன் சிறையிலிருந்து வெளியே வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொடாநீதிமன்றத்தில் நெடுமாறனின் ஜாமீன் மனு நிராகக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் புதிதாக அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டுமா அல்லது பழைய மனுவின் அடிப்படையில்மீண்டும் விசாரணை நடக்குமா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications