கூட்டணியில் இருந்து விலகிவிட வைகோ முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முடிவு செய்திருப்பதாகக்கூறப்படுகிறது.

ஆனால், இதை மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் விரும்பவில்லைஎன்றும் மதிமுக பிரமுகர்கள் கூறுகின்றனர். எப்படியிருந்தாலும் வைகோவின் முடிவுக்கு அவர்கள்கட்டுப்பட்டுவார்கள் என்றும், இது தொடர்பான இறுதி முடிவை நாளை மறுதினம் (29ம் தேதி) கூடும் மதிமுக உயர்மட்டக் கூட்டத்தில் அவைத் தலைவர் எல்.கணேசன் மூலமாக வைகோ அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

கூட்டணியில் இருந்து திமுக விலகியதால் அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர்வாஜ்பாய் முடிவு செய்துள்ளார். இதனால் தங்களது முடிவை விரைவில் அறிவிக்குமாறு மதிமுகவிற்கு பா.ஜ.க.தரப்பில் இருந்து நெருக்குதல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவின் முடிவை ஒட்டியே வைகோவின் முடிவும் இருக்கும் என பா.ஜ.க. பலமாக நம்புகிறது.

கூட்டணியில் நீடிக்கப் போவதாக பா.ம.க அறிவித்துவிட்டதால் இப்போது மதிமுக என்ன முடிவெடுத்தாலும்அதனால் கூட்டணிக்கு பெரிய பாதிப்பு ஏதும் வந்துவிடாது என்று பா.ஜ.க. கருதுகிறது. மேலும் தமிழகத்தில்அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.கவையும தக்க வைத்துக் கொள்ள முடியும் என பா.ஜ.க. நம்புகிறது.

இந் நிலையில் முடிவெடுக்க முடியாமல் மதிமுக தடுமாறி வருவதற்கு அமைச்சர்களே காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

கூட்டணியிலிருந்து திமுக விலகியதற்கு முக்கிய காரணமே தான் சம்பந்தப்பட்ட பொடா விவகாரம் என்பதால்,மதிமுகவும் திமுகவின் நிலையைப் பின்பற்றவேண்டும் என்று வைகோ விரும்புகிறாராம்.

ஆனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் தமிழக அரசு தன்னைக் கைது செய்ய முயலக்கூடும் என்றுகண்ணப்பன் அஞ்சுகிறாராம். சில மாதங்களுக்கு முன்பு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காகபொடா சட்டத்தின்கீழ் கண்ணப்பனைக் கைது செய்யப் போவதாக ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம்எழுதினார்.

இப்போது அமைச்சர் பதவி இழந்து விட்டால், தன்னைக் கைது செய்ய தமிழக அரசு செய்ய முயலும் என்றுநினைக்கிறாராம். இருந்தாலும் வைகோ எடுக்கும் இறுதி முடிவுக்குக் கட்டுப்படுவதாக கூறிவிட்டாராம்.

பொடா மறுஆய்வுக் குழு வைகோ வழக்கு குறித்த தனது தீர்ப்பை வெளியிடும்வரை கூட்டணியில் நீடிக்கலாம்,இல்லையென்றால் வைகோவின் விடுதலை தாமதமாகலாம் என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறுகிறாராம். இவரும்இறுதியில் வைகோவுக்குக் கட்டுப்பட்டுவிடுவார் என்று நம்படுகிறது.

இதனால், சென்னையில் நடைபெறவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய உயர் மட்டக் கூட்டத்தில்கூட்டணி முறிவு குறித்து அறிவிக்கப்பட்டு விடும் என்கின்றனர் இரண்டாம் மட்ட மதிமுக தலைவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+