இலங்கையிலும் மதமாற்ற தடை சட்டம்!
சென்னை:
இலங்கையிலும் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அந் ந ாட்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் தியாகராஜா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிபர் சந்திரிகா ரகசியமான முறையில் தனது பதவியைநீட்டித்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியானால் அவருக்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்த நீதிபதி யார், எங்கு, எப்போது பதவிப்பிரமாணம நடந்தது என்பது குறித்த தகவல்களைபாராளுமன்றத்தில் நிச்சயம் கேட்போம்.
பிரதமர் ரணில் பொறுப்பில் இருந்த பாதுகாப்பு உள்ளிட்ட 3 துறைகளை மீண்டும் ரணில் அரசிடம்ஒப்படைத்தால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பங்கேற்போம் என்று விடுதலைப் புலிகள்திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி இலங்கையிலும்அதுபோன்ற ஒரு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். வருகிற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் இதற்கானமசோதா அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கையில், கிறிஸ்தவ அமைப்புகளின் மதப் பிரச்சாரம், போதனைகள் மூலம் இந்துக்கள் மட்டுமல்லாது புத்தமதத்தினரும் அதிக அளவில் மதம் மாறி வருகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ளது போன்ற சட்டத்தைஇலங்கையிலும் கொண்டு வர வேண்டும் என்று இரு சமூகத்தினரும் விரும்புகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 7000 இந்துக் குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளன. இதைக்கட்டுப்படுத்தவும், கட்டாயமான முறையில் மதமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டும் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்படவுள்ளது என்றார் அவர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications