தலைவர்கள் நிர்பந்தம்; ஜாமீன் கோருவாரா வைகோ?
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜாமீன் கோர வேண்டும் என்று கட்சியின் முன்னணி தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.அவர்களது கோரிக்கையை வைகோ ஏற்கக் கூடும் என்று மதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறிவைகோ, மதிமுக பிரமுகர்கள் பூமிநாதன், செவந்தியப்பன், கணேசமூர்த்தி, வீர இளவரசன், அழகுசுந்தரம்,கணேசன், பி.எஸ்.மணியம், நாகராஜன் ஆகியோர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
பொடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வைகோ. மேலும், ஜாமீனில் வெளியே வரமாட்டேன் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார். ஆனால் மற்ற மதிமுக பிரமுகர்கள் ஜாமீனில் வெளியேசெல்ல அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வைகோவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் வைகோவுக்குசாதகமாக தீர்ப்பில் சில அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந் நிலையில் திமுக திடீர் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்துமதிமுகவும் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சிறையில்இருப்பதால் கடந்த ஒரு ஆண்டாக மதிமுக தடுமாறி வருகிறது.
முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலும் விரைவில்நடைபெறவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. எனவே வைகோ ஜாமீனில் வெளியே வந்தால்தான் கட்சிக்குப்புத்துயிர் ஊட்ட முடியும் என்று மதிமுக முன்னணித் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கருதுகிறார்கள்.
ஜாமீன் கோர வைகோ சம்மதிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கைக்குவைகோவும் சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது. வரும் ஜனவரி மாதத்தில் அவர் ஜாமீன் கோரி மனு செய்யலாம்என்றும் மதிமுக வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications