மதிமுக விலகலால் மெஜாரிட்டி இழந்தது மத்திய அரசு?
டெல்லி:
திமுக மற்றும் மதிமுக கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியதையடுத்து பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான அரசு மெஜாரிட்டி இழந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 288 எம்.பி.க்கள் இருந்ததனர். பரூக் அப்துல்லாவின் தேசியமாநாட்டுக் கட்சி (4 எம்.பிக்கள்) மற்றும் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி (4 எம்.பிக்கள்) ஆகியவைமுதலில் வெளியேறின.
இப்போது திமுக (11 எம்.பிக்கள்), மதிமுக(4 எம்.பிக்கள்) ஆகிய கட்சிகளும் கூட்டணிவை விட்டுவெளியேறியுள்ளன.
இதனால் நாடாளுமன்றத்தில் அரசின் பலம் 265 ஆகக் குறைந்துள்ளது. 545 உறுப்பினர்களைக் கொண்டமக்களவையில் 273 உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.
தற்போது வாஜ்பாய் அரசின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 265 ஆகக் குறைந்ததுள்ளதால், நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரப்பட்டால் கவிழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இப்போதைக்கு நாடாளுமன்றக் கூட்டம் நடக்க வாய்ப்பில்லை. அப்படியே எதிர்க் கட்சிகள் நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் கொண்டு வந்து சிறப்புக் கூட்டம் கூட்டப்படாலும் கூட அதிமுகவின் ஆதரவு அரசுக்குக்கிடைத்துவிடும் என்பதால் பிரச்சனைகளைக் கடந்துவிட முடியும் என பா.ஜ.க. கருதுகிறது.
இதற்கிடையே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை ஏப்ரலில் சந்திப்பதில் பா.ஜ.க. மிகத் தீவிரமாகஉள்ளது. இது குறித்து சிவசேனையின் கருத்தை அறிய அக் கட்சியின் தலைவர் பால் தாக்கரேயுடன் துணைப்பிரதமர் அத்வானி நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக்கு பாதிப்பில்லை: இல.கணேசன்
இந் நிலையில், பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அரசோ, பா.ஜ.க.வோகாரணமல்ல. வைகோ சிறையில் இருப்பதைக் காரணம் காட்டி மதிமுக கூட்டணியிலிருந்து விலகினாலும்,கூட்டணிக்கு பாதிப்பில்லை என்றார்.
இந் நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ளதை காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்வரவேற்றுள்ளார். திமுகவுடன் கூட்டணி சேரும்போது மதிமுகவையும் சேர்ப்பீர்களா என்று அவரிடம்கேட்டபோது, டெல்லி தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications