அரசு ஊழியர்கள் வழக்கு: இன்னொரு நீதிபதியும் அறிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நீங்கலான பிற மாவட்டங்களைச் சேர்ந்த 974 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கின் தீர்ப்புஅடங்கிய அறிக்கை தமிழக அரசிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி சம்பத்,நீதிபதி மலைசுப்ரமணியம், நீதிபதி தங்கவேலு ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வந்தது. இதில் முதல் கட்டமாகதலைமைச் செயலகம் மற்றும் சென்னை மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான தீர்ப்பு அரசிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் கடந்த 26ம் தேதி பிற மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான தீர்ப்பு அறிக்கையை நீதிபதிமலைசுப்ரமணியம், நீதிபதி சம்பத் ஆகியோர் வழங்கினர். ஆனால், இருவரும் அவசரப்பட்டு முன் கூட்டியேஅறிக்கையை வழங்கி விட்டதாக நீதிபதி தங்கவேலு நேற்று பரபரப்பு புகாரைத் தெரிவித்தார்.

இந் நிலையில் நீதிபதி தங்கவேலு விசாரித்து வந்த 974 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பானவிசாரணை அறிக்கையை இன்று அரசிடம் வழங்கினார். பெட்டிகளில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இவைஎடுத்துச் செல்லப்பட்டன.

இத்துடன் மொத்தம் 5714 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் 3 நீதிபதிகள் குழுவின் பணியும் முடிவடைந்து விட்டது.

நல்லகண்ணுவுடன் சந்திப்பு

இந் நிலையில், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் நிர்வாகிகள்ஸ்ரீதரன், பாண்டுரங்கன், செளந்தரபாண்டியன் ஆகியோர் இன்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்நல்லகண்ணுவை சந்தித்து தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினர்.

பின்னர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் புத்தாண்டிலாவது அரசு ஊழியர்களின்பிரச்சினைகள் தீர்ந்து அவர்கள் பணியில் ஈடுபட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 நீதிபதிகளின்விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+