இந்திரகுமாரி வழக்கு: எஸ்.பி.க்கு பிடிவாரண்ட்!
சென்னை:
ரூ. 1.19 கோடி இலவச செருப்பு ஊழல் வழக்கு விசாரணைக்கு வராமல் உள்ள காவல்துறை கண்காணிப்பாளரைவரும் 2ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு, தனிநீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி மற்றும் 17 பேர் மீது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்இலவச செருப்பு வாங்கியதில் ரூ. 1.19 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகக் கூறி சென்னை தனி நீதிமன்றத்தில்பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுசிறப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வழக்கின் விசாரணை அதிகாரியால்நீதிமன்றத்திற்கு வர இயலாத நிலை உள்ளது என்று கூறியிருந்தார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்தார் நீதிபதி. அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ஒவ்வொரு முறை விசாரணைஅதிகாரிக்கு சம்மன் அனுப்பும்போதெல்லாம் அவரால் வர முடியாத நிலை உள்ளதாக கூறுகிறீர்கள். நவம்பர் 3ம்தேதி முதல் இந்த வழக்கில் விசாரணை நடைபெற முடியாமல் உள்ளது.
டிசம்பர் 16ம் தேதி முதல் விசாரணை அதிகாரி விசாரிக்கப்பட்டு வந்தார். ஆனால் டிசம்பர் 29ம் தேதிவிசாரணைக்கு அவர் வரவில்லை. எனவே கண்டிப்பாக இன்று அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்என்று உத்தரவிட்டும் கூட அவர் வரவில்லை. அவர் வர இயலாத நிலையில் இருப்பதாக நீங்கள் (அரசு சிறப்புவழக்கறிஞர்) கூறுகறீர்கள்.
வழக்கை இழுத்துக் கொண்டே செல்ல நீங்கள் விரும்புவதாகத் தெரிகிறது. எனவே உங்களது கோரிக்கையை ஏற்கமுடியாது. வரும் ஜனவரி 2ம் தேதி விசாரணை அதிகாரியான காவல்துறைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன்கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியது, சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் கடமை என்று கூறிஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications