நிருபர்களை ஏமாற்றிய அருண் ஜெட்லி
சென்னை:
தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சர்அருண் ஜெட்லி ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்த திமுகவும், மதிமுகவும் கூட்டணியை விட்டுவெளியேறியுள்ள நிலையில், அதிமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்க தமிழக பா.ஜ.க தலைவர்களும்,வெங்கையா நாயுடு போன்ற அகில இந்திய தலைவர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இவர்களுக்கு அத்வானியின் ஆசி உள்ளது. ஆனால் இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் இதுவரை எந்தமுடிவையும் எடுக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி சென்னையில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவர் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த ஜெட்லியிடம் ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்று கேட்டபோது, அப்படிஒரு திட்டம் இல்லை என்றுதான் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குவெளியே காத்துக் கிடந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் அருண் ஜெட்லி வரவில்லை.
மாறாக, பிற்பகலில் கொளப்பாக்கத்தில் நடைபெறும் அதிமுக செயல்வீரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளஜெயலலிதா வீட்டை விட்டுப் புறப்பட்ட பின்னரே, ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர் நிருபர்கள்.


Click it and Unblock the Notifications
