வாஜ்பாய்- முஷாரப் சந்திப்பு
இஸ்லாமாபாத்:
பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சார்க் உச்சி மாநாடு நேற்று இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய்நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்றார்.
இந்த மாநாட்டில் வாஜ்பாயுடன் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜஃபருல்லா கான் ஜமாலி, வங்காள தேச பிரதமர் கலீதாஜியா, நேபாள பிரதமர் சூர்ய பஹதூர் தாப்பா, இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பூட்டான் பிரதமர்லியான்போ ஜிக்மி தின்லே மற்றும் மாலத் தீவு பிரதமர் கயூம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நேற்று ஜின்னா மாநாட்டு மையத்தில் தொடக்க விழா முடிந்தததும், வாஜ்பாய் பாகிஸ்தான் பிரதமர் ஜமாலியைச்சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு பிரச்சனைகள் குறித்துப்பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தனியாக ஹோட்டலில் பேச்சு நடத்தினர்.
இன்று காலை ஜமாலி தனது இல்லத்தில் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் தலைவர்களுக்குவிருந்து அளித்தார். இதில் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளுக்காக 10 ஏக்கர் பரப்பளவில் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் குடியிருப்புவளாகத்திற்கான அடிக்கல்லை வாஜ்பாய் நாட்டினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்தக் கட்டடம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முதல்படியாகும். இருநாடுகளும் பேச்சுவார்த்தையை மீண்டும்தொடங்கவேண்டும். இருதரப்புப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயலவேண்டும் என்றார்.
அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் வாஜ்பாய் பர்வேஸ் முஷாரபை சந்திக்கச் சென்றார். அப்போது அவர், இதுமரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும், இருதரப்புப் பிரச்சனைகள் குறித்து பேசப்போவதில்லை என்றும்தெரிவித்தார். ஆக்ரா பேச்சுவார்த்தைக்குப் பின் இரண்டாண்டுகளுக்குப் பின் இரு தலைவர்களும் நேரில்சந்தித்துப் பேசுவது இப்போதுதான்.
இந்த சந்திப்பு முஷாரப்பின் இல்லத்தில் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. சந்திப்பின்போது வாஜ்பாயுடன்வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும்பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் சிவசங்கர் மேனன் ஆகியோரும், முஷாரப்புடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மெஹ்மூத் கசூரி, வெளியுறவுச் செயலாளர் ரியாஸ் கோகர் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஷேக்அஹ்மத் ரஷீத், இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். காஷ்மீர்பிரச்சனை குறித்தும் பேசினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியா தனது கவலையைத் தெரிவித்தது.
இந்த சந்திப்பு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது என்றார்.
வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையையொட்டி, இஸ்லாமாபாத்தில் வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications