ராணுவத்தில் இணைந்தது பீஷ்மா !
சென்னை:
சென்னை ஆவடி டாங்குகள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அதி நவீன டி-90 ரக பீஷ்மா என்றடாங்குகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.
ரஷிய பாகங்களைக் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்படும் இந்த டி-90 ரக டாங்குகளை ஆவடியில் உள்ளகனரக வாகன நிறுவனம் தயாரித்து வந்தது. இந்தப் பணி முடிவடைந்த நிலையில் இந்த அதி நவீன டாங்குகளைராணுவத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது
மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் முதல் பீஷ்மா டாங்கைப் பெற்றுக் கொண்டார்.பின்னர் அதன் சாவி, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் என்.சி.விஜ்ஜிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது ராஜகோபால் பேசுகையில், ரஷிய உதவியுடன் தயாரிக்கப்படும் பீஷ்மா டாங்குகள், இன்னும்சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே முற்றிலும் சுயமாக தயாக்கப்படும் நிலை ஏற்படும். தற்போது80 பீஷ்மா ரகடாங்குகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவே வடிவமைத்துள்ள மேம்படுத்தப்பட்ட, நவீன அர்ஜூன் ரக டாங்குகளின் தயாரிப்புப் பணியும்விரைவில் ஆவடி தொழிற்சாலையில் தொடங்கும். இன்னும் சில மாதங்களில் அர்ஜூனா டாங்குகள்தயாராகிவிடும் என்றார்.
ஜென்ரல் விஜ்கூறுகையில், பீஷ்மா டாங்குகள் மூலம் இந்தியாவின் பலம் கூடுதலாகியுள்ளது. எதிரிகளின்இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்குவதில் மிகச் சிறந்தது பீஷ்மா. இந்திய ராணுவத்தில் பீஷ்மா டாங்கும்,அர்ஜூனா டாங்கும் மிக முக்கிய பங்கு வகிக்கும். உலகின் மிகச் சிறந்த டாங்குகள் வரிசையில் இவை இரண்டும்முன்னணியில் உள்ளன.
டி-90 ரக பீஷ்மா டாங்குகளில் காணப்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு விட்டனஎன்றார்.
ஒரு பீஷ்மா டாங்கின் விலை ரூ 11 கோடியாகும்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications