அரசு ஊழியர்களுக்கு 25 புதிய கட்டுப்பாடுகள் !
சென்னை:
அரசு ஊழியர்களுக்கும், அரசு டாக்டர்களுக்கும் 25 புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அதிரடியாகஅறிமுகப்படுத்தியுள்ளது.
1973ம் ஆண்டின் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளைத் திருத்தி இந்த புதிய கட்டுப்பாடுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கும், அரசு டாக்டர்களுக்கு இக் கட்டுப்பாடுகள் உடனடியாகஅமலுக்கு வருகின்றன.
புதிய கட்டுப்பாடுகள் விவரம்:
* வேலை நிறுத்தங்களில் பங்கேற்கக் கூடாது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலானசங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது, அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது, வீடுஅல்லது வீட்டு மனை தவிர பிற சொத்து வாங்கக் கூடாது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதிக்குள் சொத்துகுறித்த விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
* ரூ. 1,000க்கு மேல் உள்ள பரிசுப் பொருட்களை பெறக் கூடாது, கல்யாணம் போன்ற விசேஷங்களின்போது ரூ.5,000க்கும் மேற்பட்ட அன்பளிப்புகளைப் பெறக் கூடாது.
* தனி நபர்கள், அமைப்புகள் நடத்தும் விருந்துகளில் பங்கேற்கக் கூடாது, வேறு தொழில் எதையும் செய்யக்கூடாது.
* அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் இன்சூரன்ஸ் ஏஜென்சி போன்ற வேறு தொழிலில் ஈடுபட்டால் அதைஅரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
* வட்டித் தொழிலில் அரசு ஊழியர்கள் ஈடுபடக் கூடாது. அவர்களது குடும்பத்தினர் வட்டித் தொழிலில்ஈடுபட்டுள்ள மாவட்டத்தில் அந்த ஊழியர் பணியாற்றக் கூடாது.
* வீடு கட்டுதல், வாங்குதல், பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்கு அரசிடம் முன் அனுமதி வாங்க வேண்டும்.இந்தப் பணிகள் முடிந்த பிறகும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
* எந்த வகையான புத்தகங்களையும் வெளியிடக் கூடாது.
* டிவி, ரேடியோ போன்றவற்றில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது. பங்கேற்க வேண்டுமானால் அரசின்முன் அனுமதியைப் பெற வேண்டும்.
* அரசு டாக்டர்கள் தனியாக மருத்துவமனை நடத்தக் கூடாது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைதரலாம்.
மேற்கண்டவை உள்பட 25 அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவை உடனடியாக அமலுக்குவருகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டது தல் தமிழக அரசுஅரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில் 25 புதிய நடத்தை விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாகதனது கட்டுக்குள் வைத்திருக்க அரசு எடுத்துள்ள முயற்சியே என்று கூறப்படுகிறது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications