ராமேஸ்வரம் வந்த இலங்கைத் தமிழ் குடும்பம் கைது
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக ராமேஸ்வரம் வந்த 4 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன், அவரது மனைவி ஜெனினா குரு, மகன் அருண்ராஜ், மகள்லாரன்ஸியா ஆகியோர் ஒரு மீனவடரிம் ரூ. 2,500 கொடுத்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்தனர்.
ஆனால், அந்த மீனவர் ராமேஸ்வரம் அருகில் உள்ள ஒரு தீவில் இவர்களை விட்டு விட்டுச் சென்று விட்டார். தீவில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர்களை அந்தப் பக்கமாக வந்த ஒரு படகுக்காரர் மீட்டு தனது படகில் அழைத்து வந்தார்.
தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் 4 அகதிகளையும் மீட்டனர்.
போலீஸாரிடம் செபாஸ்டியன் கூறுகையில், தனது மகள் லாரன்ஸியாவுக்கு தொண்டையில் கட்டி உள்ளதாகவும், அவர் பேசமுடியாமல் சிரமப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை எடுக்கவே இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
விமான பயணத்திற்குரிய வசதி தங்களிடம் இல்லாததால் இவ்வாறு படகு மூலம் திருட்டுத்தனமாக வந்ததாக தெரிவித்தார்செபாஸ்டியன். நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செபாஸ்டியன் சொல்வது உண்மையாக இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள உரிய அனுமதி பெற்றுத் தர முயற்சிக்கப்படும் எனபோலீசார் தெரிவித்தனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications