காங்.- திமுக கூட்டணிக்கு வாஜ்பாய் கடும் கண்டனம்
ஹைதராபாத்:
ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்களுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள கட்சியுடன் (திமுக) காங்கிரஸ் கட்சிதேர்தல் உடன்பாடு வைக்க முயலுவதாக பிரதமர் வாஜ்பாய் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று ஹைதராபாத் நகரில் தொடங்கியது. வைஸ்ராய்ஹோட்டலில் தொடங்கிய இந்த கூட்டத்திற்குக் கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். பிரதமர்வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் வாஜ்பாய் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே வருவதற்கான அறிகுறிகளைவெளிப்படுத்தினார். இருப்பினும் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.வாஜ்பாயின் பேச்சில் காங்கிரஸ், திமுக இடையிலான தேர்தல் கூட்டணியும் இடம் பெற்றது.
வாஜ்பாய் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்தவர்களுடன் தொடர்பு வைத்துள்ள ஒரு கட்சியுடன் உறவு வைத்துள்ளது. இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதஅரசியலாகும்.
அதிகாரத்தைப் பிடிக்க கொள்கைகள், நெறிமுறைகளை மறந்து காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து போயுள்ளதை இதுகாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க.வோ, தேசியவாதம், ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை உள்ள கட்சிகளுடன்மட்டுமே கைகோர்த்து, உடன்பாடு வைத்துக் கொள்ளும்.
சமீபத்தில் நடந்த 3 சட்டசபைத் தேர்தல்களில் பெற்ற படுதோல்விக்குப் பிறகு கூட்டணி பாதையைதேர்ந்தெடுத்துள்ளது காங்கிரஸ். ஆனால் பா.ஜ.க.வோ, ஆரம்பத்திலிருந்தே கூட்டணி கட்சிகளால் மட்டுமேஇவ்வளவு பெரிய நாட்டை வழி நடத்திச் செல்ல முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அதன்படிசெயல்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக எனது தலைமையில் இயங்கிவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும், ஒவ்வொரு மாநிலத்தையும் நாங்கள்அணுகியதுமே இதற்குக் காரணம் என்றார் வாஜ்பாய்.
வாஜ்பாய் மீது இன்னும் நல்ல மரியாதை வைத்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறி வரும் நிலையில்,திமுகவை, ராஜீவ் காந்தியைக் கொன்ற கட்சி என்பது போல வாஜ்பாய் பேசியிருப்பது, திமுகவினரிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications