உளுந்தூர்பேட்டை அருகே பஸ்கள் மோதல், 5 பேர் பலி: நிவாரண நிதி வழங்க ஜெ. உத்தரவு
உளுந்தூர்பேட்டை:
தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 6பேர் பலத்த காயமும், 56 பேர் லேசான காயமுமடைந்தனர்.
இந்த விபத்து இன்று காலை 5.30க்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகரில் நிகழ்ந்தது. விருதுநகரில்இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும், சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பஸ்சும் மோதிக் கொண்டன.
இதில் தனியார் பஸ்சில் பிரயாணம் செய்த வத்ராயிருப்பைச் சேர்ந்த வேலம்மாள்(62) மற்றும் மாற்று டிரைவர்ஜெயராஜ்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேலம்மாள் கொளப்பாக்கம் அதிமுக நிர்வாகிகள்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை கிளம்பியவர்.
அரசு பஸ்சில் பயணம் செய்த அந்தியூரைச் சேர்ந்த சுரேந்திரன்(5), ஒரத்தநாட்டைச் சேர்ந்த மகேந்திரன்(19), கரூர்தீர்த்தப்பட்டைச் சேர்ந்த மாணிக்காயி(45) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில், இரு பஸ்சுகளிலும் பயணம் செய்த 62 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துதொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000மும், பலத்த காயமடைந்தவர்களுக்குரூ.15,000மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.6,000மும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நிவாரண நிதி வழங்க ஜெ. உத்தரவு
இந் நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000மும், பலத்த காயமடைந்தவர்களுக்குரூ.15,000மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.6,000மும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தேனியில் வேன் விபத்து: 4 பேர் பலி
அதே போல, வருசநாடு முத்தாலம்பாறையிலிருந்து தேனிக்கு காய்கறிகள்ஏற்றிக் கொண்டு வந்த வேன்கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 4 பேர்பலியாகனர். 16 பேர் காயமடைந்தனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications