தமிழர் நலன் காக்க அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
அதிமுகவை தோற்கடிக்கவே திமுக கூட்டணியில் இணைவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட முடிவெடுத்த பின் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகம் இன்று ஒரு சரித்திர திருப்புமுனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழன் மற்றும் தமிழகத்தின்சுயமரியாதையை பின் தள்ள முயற்சி நடக்கிறது. தமிழ், தமிழர்கள் என்ற உணர்வையே மழுங்கடிக்கவும் திராவிடசிந்தனைகளை கூர் மழுங்கச் செய்யவும் முயற்சி நடக்கிறது.
இது தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாகவே நான் நினைக்கிறேன். தமிழர்களின் நலன் காக்க,தமிழ்நாட்டின் மானம் காக்க அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதற்கு ஏதுவாக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் சேரமுடிவு செய்திருக்கிறோம்.
ஆனால், பழசை எல்லாம் துரதிஷ்டவசமாக பா.ஜ.க. மறந்துவிட்டு அதிமுகவுடனான உறவை புதுப்பிக்க முயல்கிறது.தமிழக மக்களின் விருப்பத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் எதிரான முடிவை பா.ஜ.க. எடுத்துள்ளது. அதிமுகவுடன்கூட்டணி சேரும் பா.ஜ.கவின் முடிவு எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
இதனால் மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications