சிறையிலிருந்து 8 மதிமுகவினரும் விடுதலை
வேலூர்:
பொடா வழக்கில் வைகோவுடன் கைதாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற, 8 மதிமுக நிர்வாகிகளும்வேலூர் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் பொடா சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் வைகோ தவிர, ஏனைய 8 பேரும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில்தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்தமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதன்படி, கணேசன், அழகுசுந்தரம், கணேசமூர்த்தி, நாகராஜன், மணியன், இளவரசன், பூமிநாதன் மற்றும்சிவந்தியப்பன் ஆகியோர் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைமுன்னாள் மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் உள்ளிட்ட மதிமுகவினர் வரவேற்றனர்.
வைகோவை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்:
இந் நிலையில், சிறையில் உள்ள வைகோவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன்மற்றும் ரங்கராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
வைகோ பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இம் மாதம் 21ம் தேதி விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications