தினகரனின் காரை உடைத்த அதிமுகவினர்: உடனே கட்சியை விட்டு நீக்கினார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

தேனி:

அதிமுக எம்.பியும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரனின் காரை அடித்து நொறுக்கிய 4 அதிமுகவினர்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் உள்ள கடலைக்குண்டு - மயிலாடும்பாறை அதிமுகஒன்றிய செயலாளராக தர்மராஜ் என்பவர் இருந்து வந்தார். இவரை மீண்டும் ஒன்றிய செயலாளராக நியமிக்ககொளப்பாக்கம் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைையடுத்து ஒன்றிய இணை செயலாளர் முறுக்கோடை ராமரை ஒன்றிய செயலாளராக நியமிக்கவிருப்பதாகஜெயலலிதா கூறினாராம். ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட கட்சி செய்திக்குறிப்பில் தர்மராஜே தொடர்ந்துபதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தினகரனே காரணம் என்பதால், அவர் மீதுமுறுக்கோடை ராமர் தரப்பினர் கடும் அதிருப்தியடைந்தனர்.

இந் நிலையில் தேனியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தினகரன் வந்தார்.அவரைச் சந்தித்து தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க முறுக்கோடை ராமர் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன்தேனி வந்தார். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தவே, மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களைச் சமாதானப்படுத்த தினகரன், தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆகியோர் மறியல் நடந்த இடத்திற்குவந்தனர். பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படவில்லை. இதனையடுத்து தினகரன் மற்றும் அவருடன் வந்தகார்களை ராமரின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து தினகரனின் உத்தரவின்பேரில் 200 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இச் சம்பவம் குறித்து ஜெயலலிதாவிடம் தினகரன் தெரிவித்தார். இதனையடுத்து முறுக்கோடு மணி, மாநிலக் குழுஉறுப்பினர் லோகமணி, மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம், கொத்தாளம் ஆகிய 4 பேரையும் கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில்நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும், இவர்களைகட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை தேனி மாவட்டஅதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+