ரணில் அரசை கவிழ்க்க ஜே.வி.பி- சந்திரிகா கூட்டணி
கொழும்பு:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசைக் கவிழ்க்க, சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன்இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் விடுதலைக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
ரணில் அரசைக் கவிழ்த்துவிட்டு இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது, அல்லது ரணில் திடீர் தேர்தல்அறிவித்தால் கூட்டாக இணைந்து தேர்தலை சந்திப்பது என்று இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் புதிய கூட்டணிக்கு தேசப்பற்று தேசியக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்குஇடையே கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாட்டு அரங்கில் இன்று இந்த இரு கட்சிகளின் கூட்டுக் கூட்டம்நடந்தது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.
இக் கூட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்தக்கூட்டணியின் செயல்பாடு எந்த மாதிரியாக இருக்கும் என இரு தரப்பினரும் வாய் திறக்க மறுத்துவிட்டனர்.
ஆனால், இரு கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரணில் தலைமையிலான அரசு இலங்கைமக்களிடையே ஏற்படுத்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க அந்த அரசு உடனடியாக தோற்கடிக்கப்படுவது மிகஅவசியமாகிறது.
நார்வே தலைமையிலான அமைதி முயற்சியால் விடுதலைப் புலிகளுக்குத் தான் லாபம் ஏற்பட்டுள்ளது. இந்தஅமைதி முயற்சியால் இலங்கையின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இடைக்கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் திட்டத்தையும் ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டிலும் இதே போல ஜே.வி.பியுடன் சந்திரிகா கூட்டணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தக்கூட்டணி 5 வாரத்திலேயே முறிந்து போனது. அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ரணில் கட்சி பெறும் வெற்றிபெற்றது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications