பா.ஜ.கவுக்கு பயம் வந்துவிட்டது: வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வேலைகளைக் கவனிக்க 32 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் உத்தி குறித்து விவாதிக்க 32 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுக் கூட்டம்நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழு விரைவில் கூடவுள்ளது. இந்தக் குழுவில் இளங்கோவன், சோ.பாலகிருஷ்ணன்,குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

எனது தலைமையில் இந்தக் கமிட்டி செயல்படும். மக்களவைத் தேர்தலில் கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்குறித்தும், வெற்றி பெறத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இக் கமிட்டி விவாதிக்கும். ஒவ்வொருதொகுதிக்கும் ஒரு மேற்பார்வையாளரை நியமிக்கும்.

தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கு இன்னும் காலமிருக்கிறது. இது தொடர்பான தனது பரிந்துரையை கமிட்டி,கட்சி மேலிடத்திற்கு அனுப்பும். மேலிடம் இறுதி முடிவெடுத்து, திமுகவுக்குத் தெரிவிக்கும்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியை வைக்கோல் பொம்மை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இப்போது அவர்தனி மரமாக நிற்கிறார். அவருடன் கூட்டணி வைக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. இந் நிலையில் யார்வைக்கோல் பொம்மை என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஜெயலலிதாவின் பிரதமர் கனவு, கனவாகப்போய்விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச வேட்டி,சேலைத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி, சேலைத் திட்டத்தைநாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. இது தேர்தல் ஸ்டண்ட்ஆகும்.

மேலும், தேர்தலில் ஓட்டுக்களைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து ஏழைகளுக்கும் இலவசவேட்டி, சேலைத் திட்டத்தை விஸ்தரித்துள்ளார். இலவச வேட்டி, சேலை வழங்குவதில் அதிமுகவினர் தலையீடுஅதிக அளவில் உள்ளது. அதிமுகவினர் மற்றும் அதிமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே இலவச வேட்டி, சேலைவழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என்று முதலில் பா.ஜ.க. கூறி வந்தது.இப்போது தோல்வி பயம் வந்துவிட்டதால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க துடிக்கிறார்கள், முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் கஷ்டப்படுவதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு. ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கிருஷ்ணா நீர் கேட்கும் அவர், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துகாவிரி நீர் கேட்காதது ஏன்?

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பொங்கல் விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால்நலிவடைந்த இசைக்கலைஞர்களும், மாணவர்களும் பாதிப்படைந்துள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+