அதிர்ச்சியிலிருந்து மீளாத மணப்பெண்
திருச்சி:
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமின்றி தப்பிய மணப்பெண் ஜெயஸ்ரீ இறந்துவிட்டதாக திருச்சியில் வதந்தி பரவியது. ஆனால் அவர் இறக்கவில்லை என்றும் மன அதிர்ச்சியிலிருந்து மீளாமல்அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்று திருச்சி தனியார் மருத்துவமனைவிளக்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் குருராஜன் உள்ளிட்ட 57 பேர் கோரமாகபலியாகிய நிலையில் மணப்பெண் ஜெயஸ்ரீ காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தீவிபத்தினால்அவர் பெரும் மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
திருச்சியில் உள்ள ராயல் பேர்ல் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சேர்க்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவின. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜானகிராம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயஸ்ரீ க்கு உடல்ரீதியாக ஒரு காயமும் இல்லை. ஆனால் மன அதிர்ச்சியில் அவர் உள்ளார். இதனால் அவரால் பேச முடியவில்லை.
சனிக்கிழமைதான் அவர் கதறி அழுதார். இருப்பினும் விபத்து குறித்து அவரிடம் எதையும் முழுமையாகதெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை அவரிடம் தீ விபத்தில் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் இறந்துவிட்டார்கள் என்று மட்டும்தான் தெரிவித்தோம். மாப்பிள்ளை குருராஜன் இறந்ததை அவரிடம் கூறவில்லை. வேறுஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மட்டும் தெரிவித்துள்ளோம்.
இன்னும் ஒரு வாரத்திற்கு அவருக்கு மனநல ஆலோசனைகள் கொடுக்கவுள்ளோம். அதற்குப் பிறகே அவரிடம்நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிவிப்போம் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications