பா.ம.கவை தாங்கும் திமுக; கூட்டணி கட்சிகள் அதிருப்தி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளன.
திமுக தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க.வைத் தவிர அத்தனைஎதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளுகின்றன என்று ஆரம்பத்தில் பேசப்பட்டது. இதனால் இந்தக் கூட்டணி மீதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியது.
ஆனால் இப்போது கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சலசலப்புக்கு முக்கியக் காரணம் பா.ம.க.வுக்கு திமுகஒதுக்கிய நாடாளுமன்றத் தொகுதிகள்தான்.
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு திமுக ஒதுக்கியதால், முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடும்அதிருப்தி அடைந்துள்ளது. பாரம்பரியமாக வென்று வரும் பாண்டிச்சேரியை பா.ம.கவுக்கு ஒதுக்கினால் எப்படிஎன்று பாண்டிச்சேரி காங்கிரஸ்காரர்கள் சண்டைக்கு வந்துள்ளார்கள்.
19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எங்கள் வசம் உள்ளனர், இதுவரை நடந்த 9 தேர்தல்களில் 8 தேர்தல்களில் காங்கிரஸ்வென்றுள்ளது. எங்களைத் தவிர வேறு எந்தக் கட்சி தேர்தலில் நின்றாலும் டெபாசிட் கூட கிடைக்காது. இந்நிலையில் பா.ம.கவுக்கு எப்படி திமுக இத்தொகுதியை ஒதுக்கியது என்று பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி ஆவேசமாக கேட்கிறார்.
பா.ம.கவுக்கு பாண்டிச்சேரியை ஒதுக்கப் போவது குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் கூட திமுகதெரிவிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. கொடுத்ததைவாங்கிட்டுப் போ என்ற மனோபாவத்தில் தங்களிடம் கருணாநிதி நடந்து கொள்வதாக அவர்கள் குமுறுகிறார்கள்.
பாண்டிச்சேரி குழப்பத்தால் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாமல்உள்ளது. இதற்கிடையே, ப.கண்ணன் கட்சியை விட்டு விலகியுள்ளார். அவர் வேறு ஏதாவது கட்சி ஆரம்பித்துநாடாளுமன்றத் தேர்தலில் நிற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இப்படி அதிருப்தி என்றால், மதிமுகவும் அதிருப்தியடைய ஆரம்பித்துள்ளது. அது போன முறைவென்ற திண்டிவனம் தொகுதியை இந்த முறை பா.ம.கவுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. திண்டிவனத்தில் நின்றுவென்றவர் செஞ்சி ராமச்சந்திரன்.
திமுகவுக்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் செஞ்சியார். ஆனால் அவரது அடி மடியிலேயேகை வைக்கும் விதமாக அவருக்கு திண்டிவனம் கிடைக்காதது போல நடந்து கொண்டு விட்டது திமுக என்றுசெஞ்சியார் தரப்பு கடுப்பாகியுள்ளது.
திண்டிவனத்தை மீண்டும் மதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு வைகோ கடிதம்மூலம் கோரிக்கை வைப்பார் என்று மதிமுக வட்டாரம் கூறுகிறது. ஆனால் கொடுத்தது கொடுத்ததுதான் என்றுகாங்கிரஸ் கட்சியிடமே கட் அன்ட் ரைட்டாக கருணாநிதி கூறியுள்ள நிலையில் மதிமுகவின் கோரிக்கைஅம்பலத்தில் ஏறுமா என்பது சந்தேகம்தான்.
கூட்டணி சலசலப்பில் முக்கியமானதாக தலித் கட்சிகளின் நிலையை அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.தமிழகத்தைப் பொருத்தவரை புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகளும் தலித் மக்களிடையே செல்வாக்குப் பெற்றஅரசியல் அமைப்புகளாக உள்ளன. இந்த இரண்டையுமே தேவையில்லை என்று கருணாநிதி கூறியுள்ளது,அரசியல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்தனை எதிர்க்கட்சிகளையும் சேர்த்து மெகா கூட்டணி அமைத்த கருணாநிதி செய்யும் மெகா தவறாக தலித்கட்சிகளின் புறக்கணிப்பை அரசியல் வட்டாரம் குறிப்பிடுகிறது. நிச்சயம் இவர்களால் திமுக கூட்டணிக்குப் பாதிப்புஏற்படும் என்கிறார்கள் அவர்கள்.
தென் மாவட்டங்களில் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் நல்லசெல்வாக்கு உள்ளது. அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு வட மாவட்ட தலித் மக்களின் ஒரே பிரதிநிதியாகஏகபோக வாக்கு வங்கியை வைத்துள்ளது. எனவே, தலித் கட்சிகளை கருணாநிதி நிராகரித்திருப்பது மிகப் பெரியதவறு என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
பா.ம.கவின் ஆதரவுதான் முக்கியம், அவர்களது வாக்குவங்கி அப்படியே கிடைத்து விட்டால் போதும் என்றமனோபாவத்தில் திமுக தலைவர் கருணாநிதி செயல்படுகிறார். அதனால்தான் பா.ம.கவுக்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து மற்ற கூட்டணிக் கட்சிகளை புறக்கணிக்கிறார் அல்லது குறைத்து மதிப்பிடுகிறார் என்று கூட்டணிக்கட்சியினர் புலம்புகிறார்கள்.
மொத்தத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இப்போது கலகலக்கஆரம்பித்திருக்கிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications