பா.ம.கவுக்கு எதிராக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்சு.தா. அறிவழகன்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காகஅனைத்து ஊர்களிலும் அவர்கள் அணி சேர்ந்து வருகிறார்கள்.
பாபா திரைப்பட வெளியீட்டின்போதும், அதைத் தொடர்ந்தும், நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக மிகக் கடுமையாகவிமர்சனம் செய்து பேசினார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதனால் பாபா படத்தை திரையிட முடியாமல்பல இடங்களில் தடங்கல் ஏற்பட்டது. ராமதாஸின் வலதுகரமான காடுவெட்டி குரு தலைமையிலான படைதியேட்டர்களில் நுழைந்து ஆபரேட்டர்களை தாக்கிவிட்டு படப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு போனது.
ரஜினியை பா.ம.கவினர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர்ரஜினியும், ராமதாஸுக்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறேன்என்று பொத்தாம் பொதுவாக கூறி விஷயத்தை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டார்.
இந் நிலையில் தற்போது திமுக கூட்டணியில் மீண்டும் பா.ம.க. இடம் பெற்று 6 எம்.பி. தொகுதிகளில்போட்டியிடவுள்ளது. இந்தத் தேர்தலை பழி தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவதில் ரஜினி ரசிகர்கள் தீவிரமாகஉள்ளனர்.
1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ரஜினியின் ஆக்ரோஷமான அறிக்கை மற்றும் பேச்சுக்களின்காரணமாகவே ஜெயலலிதா மிகப் பெரிய தோல்வியையும், திமுக வரலாறு காணாத வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் ரஜினியை, ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்ததை மறந்து விட்டு, அவருக்கு கூட்டணியில் முக்கியஇடத்தை திமுக கொடுத்துள்ளது ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பா.ம.கவின் தோல்விக்காக கடுமையான பிரசாரத்தில் ஈடுபட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். வடமாவட்ட ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் இந்த முறை திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடாது என்று ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், தங்களது தொகுதியில் போட்டியிடும் நல்லவேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யவும் ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ம.கவை ஒரு இடத்தில் கூட ஜெயிக்க விடக் கூடாது என்பதற்காக அது போட்டியிடும் தொகுதிகளில் ரஜினிரசிகர்கள் கடுமையாக பாடுபடப் போவதாகவும் ரசிகர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால், அவர்களை ரஜினி கட்டுப்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளது திமுக தலைமையிலான அணி.தேவைப்பட்டால் ரஜினியுடன் திமுக சார்பில் பேச்சு நடத்தவும் வாய்ப்புள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications