வைகோவின் ஜாமீன் மனு மீது பிப்-3ல் தீர்ப்பு
சென்னை:
ஜாமீன் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவின் மீது வரும் பிப்ரவரி 3ம் தேதிதீர்ப்பு வழங்கப்படும் என பொடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை நடப்பதாக இருந்த, வைகோவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, நீதிமன்றம்பிற்பகலுக்குத் தள்ளி வைத்ததால் கோபமடைந்த வைகோவின் வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புசெய்து நீதிமனறப் புறக்கணிப்பு செய்தனர்.
இதனால் வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு விசாரணை பாதியிலேயே நின்று போனது.
ஜாமீன் கோரி வைகோ தாக்கல் செய்த மனு மீது கடந்த 21ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது வைகோதனக்காக தானே வாதாடினார். இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரனே நேரில் வந்து வாதாடுவார் என அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறினார். இதையடுத்து வழக்குவிசாரணையை 22ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன் ஒத்தி வைத்தார்.
ஆனால், சந்திரனுக்கு வேறு பணிகள் இருப்பதால் அவரால் 27ம் தேதிதான் வர முடியும் என ஜெயக்குமார்கூறினார். இதையடுத்து வழக்கை இன்றைக்கு (27ம் தேதி) நீதிபதி ஒத்தி வைத்தார்.
வைகோவுக்கு எளிதில் ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்பற்காக, இழுத்தடிப்பு செய்யவே 27ம் தேதி வரைநீதிமன்றத்தில் ஆஜராகாமல் சந்திரன் தவிர்ப்பதாக மதிமுக வழக்கறிஞர்கள் அன்றே குற்றம் சாட்டினர்.
இந் நிலையில் வைகோவின் ஜாமீன் மனு மீது இன்று காலை விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். இதற்காகவேலூர் சிறையில் இருந்து வைகோவும் அழைத்து வரப்பட்டிருந்தார். ஆனால், அரசின் தலைமை வழக்கறிஞர்சந்திரன் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறுகையில், என்.ஆர். சந்திரன் உயர் நீதிமன்றத்தில் வேறுவழக்கில் ஆஜராக சென்றுள்ளதால் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
மேலும் அதுவரை வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் சாட்சிகளை விசாரித்துக்கொண்டிருக்கலாம் என்றார். இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கு மதிமுக வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேம் தெரிவித்தனர். கோபமடைந்த அவர்கள் ஒட்டுமொத்தமாகநீதிமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். வெளியே அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
வெளியே நிருபர்களிடம் பேசிய வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ், அரசு தலைமை வழக்கறிஞர் வைகோஜாமீன் மனு மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார் என்றார்.
மதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்ததால், சாட்சிகளை விசாரிக்க முடியாத சூழல் உருவானது.இதையடுத்துப் பேசிய நீதிபதி ராஜேந்திரன், வைகோ தரப்பு வழக்கறிஞர்களின் செயலால் நீதிமன்றத்தின்பணிகளை பாதித்துவிட்டது என்றார்.
அப்போது பேசிய வைகோ, அரசுத் தரப்பில் வேண்டுமென்றே செய்யப்படுகிற தாமதங்களைக் கண்டித்தே எனதுவழக்கறிஞர்கள் வெளியேறியுள்ளனர். அவர்களது வெளிநடப்புக்காண காரணத்தை என்னால் உணர முடிகிறதுஎன்றார்.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், நீதிமன்றத்தின் மரபுகளை நாம் கடைபிடித்து தானே ஆக வேண்டும். உங்கள்(வைகோ) வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்துள்ள நிலையில் நீங்கள் தொடர்ந்து நீதிமன்றத்திலேயேஅமர்ந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றார்.
ஜாமீன் மனு மீதான விசாரணையும், சாட்சிகள் விசாரணையும் பிற்பகலில் நடக்கும் என்றும் அறிவித்தார்.
இந் நிலையில் பிற்பகலில் என்.ஆர். சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி வைகோவுக்கு ஜாமீன் தரக் கூடாது என்றுவாதாடினார்.
இதையடுத்து இந்த மனு மீது வரும் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications