மதுரை உயர் நீதிமன்ற கிளையின் அதிகாரம்: சென்னை வழக்கறிஞர்கள் முட்டுக்கட்டை!
சென்னை:
மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் செயல்படவுள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு, ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை உலகனேரியில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல்செயல்படத் தொடங்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், தமிழக, பாண்டிச்சேரி பார் கவுன்சில்தலைவருமான பிரபாகரன் கூறுகையில், மதுரையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது.
அதேபோல, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு குறைந்தபட்ச மாவட்டங்களையே ஒதுக்க வேண்டும். மேலும்,அதிகபட்சம் 7 நீதிபதிகள்தான் அங்கு நியமிக்கப்பட வேண்டும் அல்லது சென்னையிலிருந்து இடமாற்றம்செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
சென்னை வழக்கறிஞர்களின் முட்டுக்கட்டை காரணமாகவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்பாகஆரம்பத்தில் தாமதம் நிலவி வந்தது. அதையெல்லாம் கடந்து தற்போது கிளை செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில்மீண்டும் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட சென்னை வழக்கறிஞர்கள் முயல்கிறார்களோ என்ற சந்தேகம்பிரபாகரனின் பேச்சு மூலம் ஏற்பட்டுள்ளது.
ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளிட்ட முழுமையான உயர் நீதிமன்றக் கிளையாக மதுரை கிளைசெயல்பட்டால்தான் தென் மாவட்ட மக்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும். அதை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் தென் மாவட்ட மக்கள் உள்ளனர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications