நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு: சமூக நீதிப் பேரவை போராட்டம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறி சமூக நீதிப் பேரவை அமைப்பைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாட்டாளி மக்கள் கட்சி, மு.கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியபிற்பட்டோர் இனக் கட்சிகள் இணைந்து சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பை நடந்தி வருகின்றன.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகளை நியமிக்க பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் பிராமண இனத்தைச்சேர்ந்தவர்களுக்கே அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுளளதாக சமூக நீதிப் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
இதை எதிர்த்து பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் தலைவர் பாலுகூறுகையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவுள்ள 9 நீதிபதிகளின் பெயர் பட்டியலை பார்த்தபோதுமிகவும் அதிர்ந்து போனோம்.
குறிப்பிட்ட உயர் வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை அதில் அதிகமாக இருந்தது. ஏற்கனவே அதே வகுப்பைச் சேர்ந்தநீதிபதிகள் அதிக அளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளனர். எனவே குறிப்பிட்ட அந்த ஜாதிக்கு மட்டும் மீண்டும்முக்கியத்துவம் கொடுத்துள்ளது, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகும்.
நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications