40 தொகுதிகளிலும் வெல்வோம்: நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்ட பிறகு வெளியே வந்த நல்லகண்ணுசெய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் நாகப்பட்டனம் தொகுதியைக் கேட்டிருந்தோம். ஆனால் அதில்திமுகவே போட்டியிடவுள்ளதால் அதற்குப் பதில் தென்காசியைக் கொடுத்துள்ளனர்.
எங்களுக்கு இதில் திருப்திதான். முன்பு ஒருமுறை தென்காசி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குவித்தியாசத்தில்தான் வெற்றியை நழுவ விட்டோம். எனவே தென்காசி தொகுதி எங்களுக்கு புதிதல்ல.
40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எங்களது அணி வெற்றி பெறும். இந்த அணி வென்றால்தான் தமிழகத்திற்குநல்லது என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications