காவிரிப் பிரச்சனை குறித்து வாயே திறக்காத வாஜ்பாய்!
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் தனது ஆட்சியின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டபடி,டாக்டர் ஜெயலலிதா என முதல்வரையும் புகழ்ந்த பிரதமர் வாஜ்பாய், தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையானகாவிரி விவகாரம் குறித்து எந்தவித உறுதிமொழியும் தரவில்லை.
நேற்று கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் வாஜ்பாய் அங்கு ரூ. 30,000 கோடியில் அமையவுள்ள தங்க நாற்கரச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிாகர்கோவில் சென்ற பிரதமர் அங்கு நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில்பேசினார்.
சுமார் 45 நிமிடங்கள் ஆங்கிலத்தில் அவர் பேச அதை தமிழில் மொழி பெயர்த்தார் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் எச்.ராஜா. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டுக் கூறி தேர்தல்பிரசாரத்தை மேற்கொண்டார் வாஜ்பாய்.
அவரது பேச்சில் தமிழகம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களும் இடம் பெற்றிருந்தன. தமிழக மக்களின் நீண்ட காலகனவான சேது சமுத்திரத் திட்டம் விரைவில் நனவாகும் என்று உறுதியளித்தார் பிரதமர்.
இதேபோல, தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வேத் திட்டங்களை விரைவில் முடிக்க இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார் பிரதமர்.
சென்னை நகர குடிநீர்ப் பிரச்சனை குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். சென்னை நகர குடிநீர்ப் பிரச்சனைக்காக ரூ. 50கோடியை விடுவித்துள்ளதாக கூறிய பிரதமர், தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்சனை மிகக் கடுமையாக இருப்பதை தான்உணர்வதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி குறித்து வாயே திறக்கவில்லை. காவிரி விவசாயிகளுக்குஉறுதியளிக்கும் விதமாக ஒரு வார்த்தையையும் பிரதமர் கூறவில்லை.
இது காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றமாக இருந்திருக்கும்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications